தமிழ்நாடு

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி: என்ன ஆச்சு?

Published

on

முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராகவும் எதிர்கட்சி தலைவராகும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது குடலிறக்கப் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டார் என்பதும் அதன் பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப்ராஸ்கோபி முறையில் சிகிச்சை பெற்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இதே பிரச்னைக்காக அவ்வப்போது அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் மருத்துவர் கூறும் ஆலோசனைப்படி அவர் நடந்து வருவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் நேற்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி வழக்கமான பரிசோதனை செய்து கொண்டார் என்றும் அதன் பிறகு ஒரு சில மணி நேரங்களில் அவர் வீடு திரும்பினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் பரிசோதனை முடிந்ததும் அவர் திரும்பி விட்டார் என்றும் எனவே அதிமுக தொண்டர்கள் எந்தவித கவலையும் வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் ஒரு அணியாக எடப்பாடிபழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில் நேற்று அதிமுகவின் இன்னொரு அணியான ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version