தமிழ்நாடு

இப்போதாவது மாணவ செல்வங்களை ஏமாற்றுவதை நிறுத்துமா விடியல் அரசு? ஈபிஎஸ் அறிக்கை

Published

on

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்த விட மாட்டோம் என்று கூறிய விடியல் அரசு இப்போதாவது மாணவச் செல்வங்களை ஏமாற்றுவதை நிறுத்துமா? என என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலம் முழுவதும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறியது. நீட் தேர்வு ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போது எதிர்க்கட்சி தலைவரும் இப்போதே முதலமைச்சருமான முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர்களது இளைஞரணி தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர் வரை தேர்தல் மேடைகளில் அம்மா அரசுக்கு எதிராக முழக்கமிட்டு மக்களை திசைதிருப்பி வெற்றி பெற்றனர்

ஓய்வுபெற்ற நீதியரசர் ஏகே ராஜன் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் திமுக அரசு குறிப்பிடவில்லை.

உயர்நீதிமன்றம் நேற்று ஓய்வு பெற்ற நீதியரசர் மகராஜன் குழுவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஏதோ இந்த அரசு தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்துவிட்டது போல முதல்வர் அவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்

தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும் அதற்கான வழி எங்களுக்கு தெரியும் என்றும் வாய் வீரம் காட்டிய ஸ்டாலின் தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக என் மீது பழி சுமத்தி உள்ளார். எனவே இனியாவாது மாணவ செல்வங்களை ஏமாற்றுவதை நிறுத்துமா விடியல் அரசு? என்று எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையின் முழு விபரங்கள் இதோ:

seithichurul

Trending

Exit mobile version