தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு யார் தெரியுமா? முதல்வர் பதில்

Published

on

எம்ஜிஆரின் வாரிசு நான் தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய நிலையில்,  எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் மக்கள் தான் வாரிசு என்று முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்

சேலத்தில் இன்று முதல்வர் பழனிசாமி அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘தற்போது சேலத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளது. இது முழுக்க முழுக்க ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காகவே கொண்டுவரப்பட்ட மினி கிளினிக் திட்டமாகும். விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக புகார் வந்த சாலையில் நானே நேரடியாக பயணம் செய்து வருகிறேன். அங்கு மேம்பாலம் கட்டப்படும். வீரபாண்டி பிரிவில் ரூ.45 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. அவர்கள் 2 பேருக்கும் மக்கள்தான் வாரிசு. அதிமுக அரசைப் பொறுத்தவரையில் மக்களோடு நேரடியாக பேசி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினோ வெறும் வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசிவிட்டு, அரசை விமர்சித்து வருகிறார்.

Trending

Exit mobile version