தமிழ்நாடு

கமல் படத்தைப் பார்த்தால் குடும்பம் காலி.. முதல்வர் பழனிசாமி விமர்சனம்

Published

on

நடிகர் கமல்ஹாசனின் படத்தைப் பார்த்தால் குடும்பம் காலி என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் மாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,’ கமல் புதுசாக கட்சியில் சேர்ந்துள்ளார். நடித்து ஒய்வு பெற்ற பிறகு வந்திருக்கிறார். அவருக்கு என்ன தெரியும். 70 வயது ஆகிறது.

பிக் பாஸ் நடத்தி கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் செய்து கொண்டு அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? பிக் பாஸ் அந்த நிகழ்ச்சியை பார்க்க முடிகிறதா. அந்த டிவி தொடரை பார்த்தால் குழந்தைகளும் கெட்டு போய்விடும், நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டு போய்விடும்.

நல்ல திட்டங்கள் எத்தனையோ உள்ளன. அவைகளை காட்டலாமே. நதி நீர் இணைப்பு குறித்து காட்டலாம், விவசாயிகள் திட்டங்கள், கண்டுபிடிப்புகளைக் காட்டலாம். எம்ஜிஆர் இருந்த போது எவ்வளவோ நல்ல நல்ல பாடல்களை, படங்களை வழங்கியுள்ளார்.

கமல்ஹாசன் எதாவது நன்மை விளைவிக்கும் ஒரு படத்தைக் காட்டியுள்ளாரா? கமலின் படத்தைப் பார்த்தால் அந்த குடும்பம் அதோட காலி’ இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

Trending

Exit mobile version