தமிழ்நாடு

ஓட்டு மெஷினில் தில்லுமுல்லு செய்து திமுக ஜெயித்துவிட்டது: ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

Published

on

ஓட்டு மிஷினில் தில்லு முல்லு செய்து திமுக ஜெயித்து விட்டது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்று கூறப்படும் ஓட்டு மிஷினில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாகவும் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு ஓட்டு போகும்படி புரோகிராம் செய்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது தோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் ஓட்டு மிஷின் மீது குற்றம்சாட்டி வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். ஏற்கனவே பல முறை இதேபோல் திமுகவும் சொல்லி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ள்ஓட்டுப் போடுவதில் திமுக வல்லவர்கள் என்றும் பல வாக்குச்சாவடிகளில் கைப்பற்றி குண்டர்களும் ரவுடிகளும் தான் ஓட்டு போட்டனர் என்று கூறியுள்ளார்.

மேலும் சென்னையில் தான் அதிக கள்ள ஓட்டு போடப் பட்டுள்ளது என்றும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு அதுதான் காரணம் அதிமுக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்தார்கள் என்று கூறினார்.

மேலும் வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்துள்ளார்கள் என்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு செல்லும்படி புரோகிராம் செய்முறை செய்துள்ளனர் என்றும் தமிழகத்தில் இதுவரை இல்லாத நிலை இந்த தேர்தலில் நடந்துள்ளது என்றும் அதனால்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஈபிஎஸின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version