தமிழ்நாடு

கருணாநிதி, அவருக்குப் பிறகு ஸ்டாலின், அடுத்து உதயநிதி: இதுதான் திமுகவின் நிலை!

Published

on

திமுக ஒரு குடும்ப கட்சி எனவும் அங்கு வாரிசு அரசியல் இருப்பதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு அந்த கட்சியின் தலைவராக அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் வருவார் என பொருள்படும்படி பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சினிமாவில் தலைக்காட்டி வந்த மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக பொதுக்கூட்டங்கள், அரசியல் மேடைகள், போராட்டங்களில், திமுக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகமாக தலைக்காட்டி வருகிறார். இதனால் உதயநிதி ஸ்டாலினும் அரசியலில் குதித்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்நிலையில் சமீப காலமாக அதிமுகவை கடுமையாக தனது அறிக்கைகள் பேட்டிகள் மூலமாக விமர்சித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேட்டியளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. ஆனால் திமுக குடும்பத்திற்காக இருக்கிற கட்சி. கருணாநிதி, அவருக்குப் பிறகு ஸ்டாலின், அடுத்து உதயநிதி என வாரிசு அரசியல் அங்கு இருக்கிறது. ஆனால் உழைப்பவர்கள், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்கள், நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய துடிப்பவர்கள், மக்கள் ஆதரவு பெற்றவர்களுக்குத்தான் அதிமுகவில் இடமிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள்தான் தற்போது பதவியில் இருக்கிறோம் என்றார்.

மேலும் தான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்றும் இங்கிருப்பவர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்து, உழைத்து முன்னுக்கு வந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் ஸ்டாலின் கொல்லைப் புறத்தின் வழியாக பதவிக்கு வந்தார். திமுகவில் கட்சிக்கு உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் பதவிக்கு வரமுடியுமா? என கேள்வி எழுப்பினார். திமுக குடும்ப அரசியலாக மாறிவிட்டது என்றும் தெரிவித்தார் அவர்.

seithichurul

Trending

Exit mobile version