தமிழ்நாடு

ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதற்கான மர்மம் என்ன? எடப்பாடி பழனிசாமி பதிலடி!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். 14 நாட்கள் முதல்வர் மேற்கொள்ள உள்ள இந்த வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

சேலத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசினார். அப்போது, தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்லது முதல்வரின் முதலீட்டை அதிகப்படுத்த வெளிநாடு செல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது என்று தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் இன்று காலை வெளிநாடு செல்லும் முன்னார் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, ஸ்டாலின் விமர்சனம் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்த. அதில், தன்னை விமர்சிக்கும் ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன? அவர் சொந்த காரணங்களுக்காக வெளிநாடு செல்கிறார். நான் தொழில் அதிபர் அல்ல. சாதாரண விவசாயிதான். தமிழகத்தில் பொருளாதாரம், வேலைவாய்ப்புகள் மேம்பட வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனேயே தொழிற்சாலைகள் இங்கு வந்துவிடாது என்றார்.

seithichurul

Trending

Exit mobile version