தமிழ்நாடு

கேம் ஓவர்.. ஓ பன்னீர்செல்வத்தின் கடைசி “ப்யூசையும்” பிடுங்கும் எடப்பாடி.. மொத்தமா போச்சே!

Published

on

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்ததோடு முடியாமல் தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடி பழனிசாமி முறையிட்டு இருக்கிறார்.

அதிமுக பொதுக்குழு முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதையும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது.

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் இது எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுக்குழுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும் தேர்தல் ஆணையமும் ஏற்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் இதில் என்ன முடிவுகளை எடுக்கிறது என்று பார்க்க வேண்டும். தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆக முடியும். அப்படி நடந்தால் மட்டுமே அவர் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தலை நடத்த முடியும்.

இதனால் தேர்தல் ஆணையத்தின் முடிவை எடப்பாடி நம்பி இருக்கிறார். இதையடுத்தே உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் தற்போது தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளனர். இதை வைத்து தேர்தல் ஆணையத்திலும் சாதகமான தீர்ப்பை பெற முடிவு செய்துள்ளனர்.

பாருங்கள் உச்ச நீதிமன்றம் எங்கள் முடிவை ஏற்றுக்கொண்டு விட்டது. பொதுக்குழு சரிதான் என்று கூறிவிட்டது. அப்படி என்றால் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் சரிதான். எனவே எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரியுங்கள் என்று எடப்பாடி தரப்பு தேர்தல் ஆணையத்தில் வாதம் வைக்கும். அப்படி வைக்கும் பட்சத்தில் அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் கதை முடிந்தது,.

மொத்தமாக ஓ பன்னீர்செல்வத்திற்கு அது முடிவுரையாக இருக்கும். அரசியல் ரீதியாக ஓ பன்னீர்செல்வத்திற்கு அது மிகப்பெரிய முற்றுப்புள்ளியாக இருக்கும். இதனால் தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வமும் எதிர் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version