தமிழ்நாடு

ஆளுனரை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Published

on

தமிழக ஆளுநராக பதவி ஏற்ற ஆர்.என். ரவி அவர்களை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன்னர் முன் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தல் முறைகேடு குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம் என்றும் உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என புகார் அளித்துள்ளோம் என்றும் தங்களது புகார்கள் மீது அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தோம் என்றும் கூறினார்.

அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை தாமதமாக அறிவித்தார்கள் என்றும் நீதிமன்ற உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்றும் ஆளுனரிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்தார்.

மேலும் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் வேட்புமனுக்கள் பல நிராகரிக்கப்பட்டதாகவும் ஆளுநர் தெரிவித்ததாக அவர் கூறினார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் விதிமுறை நடந்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டுமென ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பதவியேற்ற ஆளுனரை அண்ணாமலை உள்பட ஒருசில பாஜக தலைவர்கள் சந்தித்த நிலையில் தற்போது எதிர்க்கட்சி தலைவர்எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version