தமிழ்நாடு

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: கோபத்தில் வெளியேறிய ஓபிஎஸ்!

Published

on

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய கடந்த 7ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடிய நிலையில் அன்றைய தினம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் ஆதரவாளர்கள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய இன்று மீண்டும் அதிமுக தலைமையகத்தில் எம்எல்ஏக்கள் கூடினர். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை எதிர்க்கட்சி தலைவராக ஓபிஎஸ் முன்மொழிந்தார். இதனால் ஈபிஎஸ் தரப்பினர் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் விடாமுயற்சியால் அவர்கள் ஈபிஎஸ் தான் எதிர்கட்சி தலைவராக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தேர்வை ஏற்காமல் ஓ பன்னீர்செல்வம் கோபித்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேறிய தகவல் வெளிவந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version