தமிழ்நாடு

தியாக வரலாறு என்னுடையது. அவமானகரமானது ஈபிஎஸ் வரலாறு: முக ஸ்டாலின்

Published

on

தன்னுடைய வரலாறு தியாக வரலாறு என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரலாறு அவமானகரமானது என்றும் நேற்று தேர்தல் பிரச்சார மேடையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. கமல். சீமான் மற்றும் தினகரன் கூட்டணி களத்தில் இருந்தாலும் இந்த இரண்டு கூட்டணிகளுக்கு இடையே தான் ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் ஒருவரை ஒருவர் பகிரங்கரமாக தாக்கிக் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ராமநாதபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய போது தன்னுடைய வரலாறு தியாக வரலாறு என்றும் எடப்பாடி பழனிச்சாமி வரலாறு அவமானகரமானது என்றும் தெரிவித்துள்ளார்.

நெருக்கடி நிலையை எதிர்த்து ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தது உள்பட பல்வேறு போராட்டங்களை கொண்ட அரைநூற்றாண்டு தியாக வரலாறு என்னுடையது என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வரலாறு அவமானகரமானது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version