தமிழ்நாடு

எழுத்துப்பிழையுடன் பதாகை: ஈபிஎஸ் ஆர்ப்பாட்டத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Published

on

எழுத்துப்பிழை பதாகையுடன் ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆர்ப்பாட்டத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது கூடியிருந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் கையில் திமுக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியிருந்தனர்

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி பதாகையை ஏந்தியபடி கோஷமிட கூட இருந்தவர்களும் உடன் கோஷமிட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும், அதனை சந்திக்க தயார் என்றும் தற்போது அரசு கடன் சுமையில் இருப்பதற்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் எனக் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும், எதிர்க்கட்சித் தலைவரான நான் திமுக அரசின் குறைகளை கூறுவதால் தான் இந்த அரசு சிறப்பாக ஆட்சி நடைபெறுவதாகவும் கோஷமிட்டனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கையில் வைத்திருந்த பதாகையில் நீட் தேர்வை ரத்து செய்ரேன்’ என்று எழுத்துப் பிழையுடன் கூடிய பதாகை இருந்ததை பார்த்த நெட்டிசன்கள் ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு இந்த எழுத்துப்பிழை கூட தெரியவில்லையா என சமூக வலைதளங்களில் இணையவாசிகள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்

இந் நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை அனுமதி இன்றி கூட்டம் கூடியதால் சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version