தமிழ்நாடு

“ஐயா… 12வது ஆல் பாஸ் பண்ணிவிடுங்க!”- பிரச்சாரத்தின் போது எடப்பாடியாருக்கு ரிக்வஸ்ட் வைத்த மாணவன்

Published

on

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எப்போது பிரச்சாரத்திற்கு சென்றாலும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது உண்டு. அந்த வகையில் தற்போது இன்னொரு வைரல் ரக சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக, வேன் மீது ஏறி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் யுக்தியைக் கொண்டவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, ஒரு பள்ளி மாணவன், அவருக்கு வித்தியாசமான கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

பழனிசாமியின் வேன், மாணவன் அருகே வரும் போது, ‘ஐயா, 12வது ஆல் பாஸ் பண்ணி விடுங்கய்யா. ஸ்கூல இழுத்து மூடுங்க ஐயா’ என சத்தமாக சொல்கிறான். இதைக் கேட்டு அருகில் இருக்கும் மக்கள் குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ பதிவு இதோ:

இதற்கு முன்னரும் எடப்பாடியாரின் பிரச்சாரக் கூட்டத்தில் இதைப் போன்ற சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. அப்படி ஒரு முறை, கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘ஐயா… தல அஜித்தோட வலிமை பட அப்டேட் சொல்லுங்க’ என்று கேட்டார்.

 

Trending

Exit mobile version