தமிழ்நாடு

லண்டனில் கோட் சூட்டில் எடப்பாடி பழனிசாமி: 2 ஒப்பந்தங்களில் கையெழுத்து!

Published

on

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத் துறை மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துக்கு இடையே 2 ஒப்பந்தங்களை கையெழுத்தாகியுள்ளார்.

நேற்று முன்தினம் லண்டன் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவத் துறையில் செயல்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணித்தரத்தின் மேம்பாடுகளை தமிழகத்தில் செயல்படுத்த சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினருடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

இந்த நிக்ழ்ச்சியில் முதல்வருடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தனர். அப்போது முதல்வரும், அமைச்சரும் கோட் சூட் அணிந்திருந்தனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எப்போதும் வேட்டி சட்டையில் பார்த்து பழக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது கோட் சூட்டில் லண்டனில் வலம் வருகிறார். அங்கு அவர் வரும் 1-ஆம் தேதி வரை தங்குகிறார். அன்றைய தினம் இரவு அமெரிக்கா புறப்படுகிறார்.

seithichurul

Trending

Exit mobile version