தமிழ்நாடு

எடப்பாடி சொல்லித்தான் தம்பிதுரை பாஜகவை விமர்சிக்கிறார்: தினகரன் தகவல்!

Published

on

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுக, பாஜக கூட்டணி அமையாது என தம்பிதுரை கூறி வருவது அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக நாடாளுமன்றத்தில் ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பாஜகவை விமர்சித்த தம்பிதுரை, பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோத கொண்டுவந்ததையும் எதிர்த்தார். மேலும் பாஜக, அதிமுக கூட்டணி அமையாது, பாஜகவை தூக்கி சுமக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை, அதிமுகவிற்குள் பாஜக மூக்கை நுழைக்க வேண்டாம் என தொடர்ந்து அதிரடியாக பேசி வருகிறார் தம்பிதுரை.

தம்பிதுரை இவ்வாறு தொடர்ந்து பேசி வருவதன் பின்னணியில் யார் இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம், அதிமுகவில் பாஜகவை தம்பிதுரை மட்டும் விமர்சித்துப் பேசிவருகிறாரே என்று கேள்வி எழுப்பினர்.

தம்பிதுரை குறித்தான இந்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், எடப்பாடிக்கு பிரச்சினை வரவேண்டும் என்று தம்பிதுரை பேசிவருவதாகத்தான் நான்கூட நினைத்தேன். ஆனால், எடப்பாடி சொல்லித்தான் தம்பிதுரை பேசிவருகிறார் என எனக்குத் தகவல் வந்துள்ளது என்றார்.

seithichurul

Trending

Exit mobile version