தமிழ்நாடு

மோடி – எடப்பாடி ஆலோசனை.. நடந்தது என்ன?

Published

on

கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனாவுக்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சையிலா, இறப்பு விகிதம் 0.67 சதவீதமாக உள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்க, கூடுதல் தானியம் வழங்க வேண்டும். கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்த மே 31-ம் தேதி வரை விமான சேவையை நிறுத்தி வைக்க வேண்டும்.

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமடைந்து வருவதால், மே 31 வரை சென்னைக்கு ரயில் சேவை வேண்டாம். அதே நேரம் 61 ரயில்கள் மூலம் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பு வைக்க தமிழக அரசு முட்வு செய்துள்ளது. சம்மந்தப்பட்ட மாநில முதல்வர்களிடம் அதற்கான கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு கொரோனா நிவாரண நிதியாக ஏற்கனவே கேட்ட 2 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். தொடர்ந்து நடப்பு நிதியாண்டின் 33% நிதி, நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை போன்றவற்றை வழங்க வேண்டும்.

தேசிய பேரிடர் மீட்பு பணிகளின் கீழ் மருத்து உபகரணங்களை வாங்க தற்காலிகமாக 1000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். சிறு மற்றும் குறு தொழில்களை மீட்டெடுக்க 2500 கோடி ரூபாயை வழங்க வேண்டும்” என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார்.

seithichurul

Trending

Exit mobile version