இந்தியா

பெண் செய்தியாளரின் ரூ.1.77 கோடி வங்கிக்கணக்கு முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Published

on

பெண் செய்தியாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 1.77 கோடி மதிப்பிலான பணத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிபவர் இந்தியாவை சேர்ந்த ரானா என்ற பெண். இவருக்கு பல லட்சங்களை சம்பளமாக கிடைத்து வரும் நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்த ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள வங்கி கணக்கை அமலாக்கத் துறையினர் திடீரென முடக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காசியாபாத் என்ற பகுதியை சேர்ந்த விதாஸ் என்ற என்ஜிஓ அளித்த புகாரின் பெயரில் பெண் செய்தியாளர் ராணாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் அது மட்டுமின்றி அவரது சொத்துக்களும் முடக்கப்பட்டு உள்ளதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்.ஜி.ஓக்கள் அளித்த நன்கொடை நிதியை செய்தியாளர் ரானா தனது சொந்த கணக்கில் மாற்றிக் கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே செய்தியாளர் ரானாவின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version