உலகம்

பொருளாதார சரிவால் திடீரென அறிவிக்கப்பட்ட எமர்ஜென்ஸி: ஜனாதிபதி உத்தரவால் பரபரப்பு!

Published

on

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் திடீரென பொருளாதார எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதும் இதன் காரணமாக அந்நாட்டின் பிரதான வருவாய்துறையான சுற்றுலா உள்ளிட்ட பல துறைகள் முடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அன்னிய செலவாணி கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளதும், இலங்கையின் பண மதிப்பு சர்வதேச சந்தையில் வெகுவாக சரிந்துள்ளதன் காரணமாக அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் உணவு பொருட்களின் இருப்பு குறைவு காரணமாக விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உணவுப் பொருள்களின் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தவும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் நாடு முழுவதும் பொருளாதார அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த எமர்ஜென்ஸி மூலம் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட முக்கிய பொருள்களின் விலையை கட்டுப்படுத்த முடியும் என்று அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சில்லரை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகள் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்யவும் விலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள் இலங்கையில் மிக அதிகமாக விலை உயர்ந்ததை அடுத்து இந்த பொருள்களின் விலையை கட்டுப்படுத்த எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version