உலகம்

புதினின் இரண்டு மகள் மீதும் பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published

on

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக ஏற்கனவே அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் தற்போது அவருடைய இரண்டு மகள்களுக்கும் பொருளாதார தடை விதித்துள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது .

உக்ரைன் மீது கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது என்பதும் உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமான உதவிகளையும் ரஷ்ய நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடையும் விதித்து வருகிறது.

அதுமட்டுமின்றி தனிப்பட்ட முறையில் ரஷ்ய அதிபர் புதின் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் அவரது மகள்கள் பெயரில் மாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில் அவரது இரண்டு மகள்களான மரியா புதினா, காட்டரீனா டிக்கோனோவா ஆகியோருக்கும் பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ரஷ்ய அதிபர் புதின் தரப்பில் இது குறித்து கூறியபோது மகள்கள் மீது பொருளாதார தடை விதித்ததால் தாங்கள் எந்தவிதமான கவலையும் படவில்லை என்றும் யார்மீது பொருளாதார் தடை விதித்தாலும் பயப்பட போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version