தமிழ்நாடு

மின்துறை மற்றும் போக்குவரத்து துறை தனியார் மயமாகிறதா?

Published

on

தமிழக நிதியமைச்சர் இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன என்பதை படிப்படியாக பார்த்தோம். குறிப்பாக மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய இரண்டு துறைகள் மட்டுமே இரண்டு லட்சம் கோடிக்கும் மேல் கடன் வைத்திருப்பதாக கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இரண்டு துறைகளையும் கடனில் இருந்து மீட்பது என்பது மிகப் பெரிய கஷ்டம் என்பதால் இந்த இரண்டு துறைகளையும் தனியாருக்கு விற்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நஷ்டமடையும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை ஏற்கனவே மத்திய அரசு செய்து வரும் நிலையில் மாநில அரசும் தற்போது அதே வழியை பின்பற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்தியாவின் பல மாநிலங்களில் மின்சார துறை தனியார் வசம் தான் உள்ளது என்பதும் அந்த மாநிலங்களில் மின் கட்டணங்கள் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அரசின் கையில் உள்ள மின்சார துறை குறைந்த அளவு கட்டணமே பெற்று வருகிறது. இந்த நிலையில் மின்சாரத்தை தமிழகத்தில் தனியார் துறைக்கு தாரை வார்த்தால் தனியார் நிறுவனங்கள் லாபத்தைக் கணக்கில் கொண்டு மின் கட்டணத்தை மிக அதிக அளவில் உயர்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதேபோல் போக்குவரத்து துறையை நஷ்டத்துடன் இயங்க எந்த தனியார் நிறுவனமும் அனுமதிக்காது. எனவே போக்குவரத்து துறை தனியாருக்கு சென்றால் பேருந்து கட்டணம் மிகப்பெரிய அளவில் உயரும் என்பதும் இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மறைமுகமாக மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறையை தனியாருக்கு கொடுக்கப்போகிவதன் அறிகுறியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version