தமிழ்நாடு

பெரும் நஷ்டத்தில் போக்குவரத்து துறை, மின்துறை: கட்டணம் உயர வாய்ப்பா?

Published

on

பெரும் நஷ்டத்தில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை இருப்பதால் கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் இன்று வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த வெள்ளை அறிக்கையில் அவர் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்ட நிலையில் மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்து துறை ஆகிய இரண்டு துறைகளும் மிகப்பெரிய கடனில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு துறைகளுக்கு மட்டும் 2 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது என்றும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் அரசு பேருந்துகளை இயக்க ரூபாய் 59 நஷ்டம் ஏற்படுகிறது என்றும் அவர் வெள்ளை அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதேபோல் மின்சாரத் துறையில் பெரும் கடனில் இருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து மின் துறை மற்றும் போக்குவரத்து துறையின் கடனை மீட்கும் வகையில் மின்சார கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் தற்போது பேருந்து கட்டணம் மற்றும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பி வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் பேருந்து கட்டணம், மின்சாரக் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை உயர்த்தவில்லை என்று கூறியிருக்கும் நிதியமைச்சர், அவ்வாறு உயர்த்தி இருந்தால் திமுக போராட்டம் நடத்தாமல் இருந்திருக்குமா? என்ற கேள்வியும் மக்கள் எழுப்பி உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version