ஆரோக்கியம்

இதனைச் சாப்பிடுவதால் ஆஸ்துமா மற்றும் மார்பு சளி குணமாகும்!

Published

on

முருங்கை காய்:

இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. முருங்கை மரத்தை வளர்ப்பதன் மூலம், அதன் பூ, காய், இலை, பிசின் என அனைத்தும் உடலுக்கு மருத்துவ சக்தியை அளிக்கக்கூடியது.

முருங்கையை யார் உணவில் பயன்படுத்துகிறாரோ, அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையுடன் நடந்து செல்வர் என்பதே அர்த்தம்.

முருங்கைக்காயை வாரத்தில் இரு முறை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி காக்கிறது. மூட்டு வலியைப் போக்க வல்லது.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நுரையீரல் தொடர்புடைய பிரச்சனையைச் சரிசெய்யும். ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆண்மை சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நோய் தொற்று உருவாதலைத் தடுக்கிறது.

முருங்கைக் கீரை:

முருங்கைக்கீரை, அகத்திக்கீரையை வதக்கும்போது கரண்டியின் காம்பு பகுதியை வைத்துக் கிளறினால், கட்டியாக இல்லாமல் உதிரியாக இருக்கும்.

ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையையும் முருங்கைக் கீரை அகற்றும்.

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடலில் நல்ல ரத்தம் ஊறும்.

முருங்கைப்பூ:

பித்தம், வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும்.

பழமொழி – விளக்கம்:

“வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி”

பொருள்:

கீரைகள் சத்துக்கள் நிறைந்தவை. அதை முறையாக வேக வைக்க வேண்டும். முருங்கைக்கீரையை அதிகமாக வேகவைத்தால் அதன் சத்துக்கள் அழிந்துவிடும. அகத்திக்கீரையை நன்றாக வேகவைக்கவில்லை என்றால் அதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்காது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version