ஆரோக்கியம்

இதைச் சாப்பிடுவதால் இந்த வகையான நோய்களைத் தடுக்கலாம்!

Published

on

கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ரத்தசோகையைச் சரிசெய்யும் . கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும். மலட்டுத் தன்மையைப் போக்கும். உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நசுக்கி, அதனை இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி, காலை மாலை என இரு வேளை குடிக்க வெள்ளைப்படுதல் தீரும்.

கீழாநெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை மாலை என நாட்கள் குறைந்து குளிர்ச்சி பெறும். மேலும், விக்ஷக் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை விலக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

கீழாநெல்லியை 50 கிராம் எடுத்து, அதை 200 மி.லி. எருமைத் தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். மருந்து சாப்பிடும் மூன்று நாட்களும், உணவுடன் மோர் சேர்க்க வேண்டும். மேலும் ஹெப்படைட்டிஸ் ‘பி’ மற்றும் ‘சி’ ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

கீழாநெல்லியின் கற்கண்டு சேர்த்து அரைத்து காலை, மாலை என நான்கு நாட்கள் சாப்பிடச் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.

கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.

seithichurul

Trending

Exit mobile version