ஆரோக்கியம்

தினம் ஒன்று வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களைத் தடுக்கலாம்!

Published

on

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது.

நீரிழிப்பு நோய் வரமால் தடுக்கும். புற்றுநோயை வருவதைத் தடுக்கிறது. உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வாய் துர்நாற்றம் முற்றிலும் விலகும். 30 நொடிகள் வரை வைக்கவும், அது வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர்நாற்றத்தைப் போக்கும். வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.

cucumber

செரிமான அமைப்பைச் சீராக வைக்க உதவும். கொழுப்பு செல்கலைக் கரைக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறையச் செய்யும். நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

முகம் பொலிவாக இருக்கும். சிலிகா என்ற அற்புதமான கனிமம் வெள்ளரிக்காயில் உள்ளதால், அவை நகங்கள் மற்றும் முடியைப் பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும். மேலும் அதிலுள்ள சல்பரும், சிலகாவும் முடியின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கும்.

கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும். கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டசியம், கந்தகம், சிலிகன், குளோரின் போன்ற தாதுச் சத்துகளும் உள்ளன.

மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தயிர்ச் சாதத்துடன் இதனைச் சேர்த்துச் சாப்பிட்டால், கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.கல்லீரல் பலம்பெற்று மஞ்சள் காமாலை விரைவில் குணமாகிட வழி வகுக்கிறது.

கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும். மேலும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கச் செய்யும்.

Trending

Exit mobile version