ஆரோக்கியம்

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க இந்த பழத்தை சாப்பிடுங்கள்!

Published

on

பப்பாளியை உண்பவர்கள் பெரும்பாலும் அழகு கூடும். தேகம் பளபளப்பாகும் என்ற எண்ணத்திலேயே அதை எடுத்து கொள்கிறார்கள். ஆனால், ’வைட்டமின் ஏ’ அதிகளவு நிறைந்துள்ள பப்பாளியைச் சாப்பிடுவதால் செரிமானத் திறன் அதிகரிக்கும். உடலின் ரத்தத்தைச் சுத்திகரித்து வயிற்றுப் புழுக்களை அழிக்கும். தினம் ஒரு துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட்டு வரக் கண்பார்வை பளிச்சிடுவதோடு மலச்சிக்கலும் தடைப்படுகிறது.

பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பைத் தடுக்கிறது. அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும். ஆனால் பப்பாளியை சாப்பிட்டால் நன்மை உண்டாகும். இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளிப் பழத்திற்கு உண்டு.

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லைக் கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். பப்பாளி இலைகளை அரைத்துக் கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும். பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

இது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும். பப்பாளி குறைவான கலோரிகளும், வளமையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பப்பாளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். செரிமானத்திற்கு உதவி செய்வதால், இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

seithichurul

Trending

Exit mobile version