ஆரோக்கியம்

Weight Loss: டயட் இல்லாமலேயே எடை குறைப்பது எப்படி?- டிப்ஸ்

Published

on

மாறி வரும் உணவுப் பழக்க முறையால் உடல் பருமன் என்பது பெரும்பான்மையான மனிதர்களுக்கு மிகப் பெரும் பிர்ச்சனையாக உள்ளது. இதற்கு தீவிர உடற்பயிற்சி, கடுமையான உணவுக் கட்டுப்பாடு என இருந்தாலும், சில நாட்களில் அனைத்தும் காற்றில் பறந்துவிடும். எனவே எடை குறைப்பில் தொடர்ந்து செய்தலும், வெகு நாட்களுக்கு செய்தலும் மிக முக்கியமான விஷயங்களாகும்.

அப்படி டயட் இல்லாமலேயே உணவில் சில மாற்றங்களைச் செய்தால் எடை குறைப்புக்கு உதவும் சில டிப்ஸ்,

1.காலை உணவு

பலரும் வேலை அவசரத்தில் தவிர்க்கும் ஒரு விஷயம் காலை உணவு. இரவு முழுவதும் பட்டினியாக இருக்கும் வயிறு காலையில் ஊட்டச்சத்துள்ள உணவுக்கு ஏங்கும். அப்படியான நேரத்தில் பட்டினியாக இருப்பது உடலுக்குப் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வரும். காலை உணவைத் தவிர்த்து மதிய உணவைச் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும்.

2.அதிக புரதம்

புரதச் சத்து என்பது வெறுமனே தசை வளர்ப்புக்கு மட்டுமானது அல்ல, அது எடை குறைப்பிலும் பெரும் பங்காற்றுகிறது. சைவ மற்றும் அசைவ புரதச் சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளப் பழகுங்கள்.

3.ஃப்ரெஷ்ஷாக சாப்பிடுங்கள்

முன்னரே சமைத்த உணவு, பாக்கெட் உணவு மற்றும் உடனடியாக தயார் செய்யக்கூடிய உணவுகளில் அதிக கொழுப்புச் சத்து இருக்கும். அதே நேரத்தில் ஃப்ரெஷ்ஷாக சமைத்தோ, அல்லது பச்சையாக சாப்பிடும் உணவில் அதிக ஊட்டச்சத்துகள் இருக்கும். அதை சாப்பிட பழக வேண்டும்.

4.தண்ணீர்

அதிகம் தண்ணீர் பருகுவது எடை குறைப்பில் மட்டுமல்ல மொத்த ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். விஞ்ஞான ஆய்வுகளிலும் அதிக நீர் பருகுதல் எடை குறைப்புக்கு வித்திடுவது கண்டறியப்பட்டு உள்ளது.

Trending

Exit mobile version