ஆரோக்கியம்

Mango: கோடை வெப்பத்தை வெல்ல எளிதான மாம்பழம் ஐஸ்கிரீம் ரெசிபி!

Published

on

கோடை வெப்பத்துலிருந்து இருந்து நமக்கு சிறிது ஓய்வு அளிப்பதற்கு குளிர்ச்சியான ஐஸ்கிரீம் போன்ற எதுவும் இல்லை. நீங்கள் வீட்டிலேயே சொந்தமாக இனிப்பு வகைகளை செய்ய விரும்புபவராக இருந்தால், எளிமையான ஐஸ்கிரீம்களை தயாரிப்பது உங்களுக்கு மிக எளிதாக இருக்க வேண்டும்.

குறைவான பொருட்கள் மற்றும் கோடைகால பழங்கள் கொண்டு வீட்டிலேயே 30 நிமிடங்களுக்குள் உங்கள் பிடித்த ஐஸ்கிரீம்களை தயாரிக்கலாம்! அதுபோன்ற எளிதான ரெசிபி ஒன்றைப் பார்க்கலாம்.

மாம்பழம் ஐஸ்கிரீம்

மாம்பழம் வாழைப்பழம் ஐஸ்கிரீம்:

கோடையில் மாம்பழம் இல்லாமல் இருக்க முடியுமா? நிச்சயமாக இல்லை! மூன்றே மூன்று பொருட்களைக் கொண்டு, அரை மணி நேரத்தில் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம். க்ரீம் இல்லை, சர்க்கரை இல்லை , இனிப்பு மற்றும் மிருதுவான வாழைப்பழம் மற்றும் மாம்பழத்தின் நன்மை, மற்றும் பாதாம் பருப்பு – இவை அனைத்தும் இதை ஒரு சுவையான விருந்தாக ஆக்குகின்றன.

ஐஸ்கிரீமுக்கு தேவையான பொருட்கள்:

  • 1 உறைந்த வாழைப்பழம்
  • 1 மாம்பழம்
  • 10 கிராம் பாதாம்

செய்முறை:

உங்கள் பிளெண்டரில் போடுவதற்கு முன், உங்கள் வாழைப்பழம் சரியாக உறைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழம் முற்றிலும் மிருதுவாகவும், கிரீமியாகவும் இருக்கும் வரை இரண்டு நிமிடங்களுக்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் உங்கள் மாம்பழத்தை நறுக்கி, அதை பிளெண்டரில் வாழைப்பழத்துடன் சேர்த்து, அது மென்மையான பேஸ்ட் ஆகும் வரை அரைத்துக்கொள்ளவும். அடுத்து, உங்கள் பாதாமை நறுக்கி, மாம்பழம்-வாழைப்பழம் கிரீமில் சேர்த்துக் கிளறவும். சிறிது நேரம் ஃப்ரீசரில் வைத்து பரிமாறவும் !

author avatar
seithichurul

Trending

Exit mobile version