ஆரோக்கியம்

குதிகால் வெடிப்புக்கு வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சிகிச்சைகள்

Published

on

சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இயற்கை முறையில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றனர். குதிகால் வெடிப்பு பிரச்சனையும் அவற்றில் ஒன்று.

குதிகால் வெடிப்புக்கான காரணங்கள்:

• அதிக குளிர்ச்சி
• வறண்ட சருமம்
• அதிக உடல் எடை
• நீண்ட நேரம் தண்ணீரில் நின்று கொண்டிருத்தல்
• அசுத்தமான வாழ்க்கை முறை
• செருப்பு அணியாமல் வெறும் காலுடன் நடத்தல்
• குதிகால் வெடிப்புக்கு வீட்டில் செய்யக்கூடிய சிகிச்சைகள்:

மவுத்வாஷ்:

வாய் பராமரிப்பிற்கு பயன்படுத்தும் மவுத்வாஷ் குதிகால் வெடிப்புக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது. 2 பங்கு தண்ணீரில் ஒரு பங்கு மவுத்வாஷ் சேர்த்து கலவையில் கால்களை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

தேங்காய் எண்ணெய்:

தினமும் தேங்காய் எண்ணெய் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் எண்ணெயில் ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளன. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் குதிகால் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பால் மற்றும் ஓட்ஸ்மீல்:

பால் மற்றும் ஓட்ஸ்மீல் கலவையை வாரம் ஒரு முறை கால்களில் தடவி வர நல்ல பலன் பெறலாம்.

பப்பாளி பழம்:

பப்பாளி பழத்தை கத்தரித்து மசித்து தடவி, அது காயும் வரை காத்திருந்து பின் சுத்தமான நீரால் கழுவவும்.

மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு:

மஞ்சள் தூள் சிறந்த கிருமி நாசினி. கல் உப்பு கிருமிகளை நீக்குகிறது மற்றும் பாதத்தை பளிச்சென்று ஆக்குகிறது.

குறிப்பு:

மேற்கூறிய சிகிச்சைகள் அனைத்தையும் முயற்சி செய்த பிறகும் குதிகால் வெடிப்பு குறையவில்லை என்றால், மருத்துவரை அணுகவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். சத்தான உணவுகளை உட்கொள்ளவும். வசதியான செருப்புகளை அணியவும்.

Trending

Exit mobile version