Connect with us

ஆரோக்கியம்

Vanilla Ice Cream: எளிதான மற்றும் சுவையான வெண்ணிலா ஐஸ்கிரீம் ரெசிபி!

Published

on

கோடை வெப்பத்துலிருந்து இருந்து நமக்கு சிறிது ஓய்வு அளிப்பதற்கு குளிர்ச்சியான ஐஸ்கிரீம் போன்ற எதுவும் இல்லை. நீங்கள் வீட்டிலேயே சொந்தமாக இனிப்பு வகைகளை செய்ய விரும்புபவராக இருந்தால், எளிமையான ஐஸ்கிரீம்களை தயாரிப்பது உங்களுக்கு மிக எளிதாக இருக்க வேண்டும்.

குறைவான பொருட்கள் மற்றும் கோடைகால பழங்கள் கொண்டு வீட்டிலேயே 30 நிமிடங்களுக்குள் உங்கள் பிடித்த ஐஸ்கிரீம்களை தயாரிக்கலாம்! அதுபோன்ற எளிதான ரெசிபி ஒன்றைப் பார்க்கலாம்.

ஐஸ்கிரீம்

வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்முறை

தேவையான பொருட்கள்:

  • 1 கப் பால்
  • 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 கப் விப்பிங் கிரீம்
  • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
  • 5 டேபிள் ஸ்பூன் தூள் சர்க்கரை

செய்முறை:

  1. முதலில், ஒரு வாணலியில் 1 கப் பால் மற்றும் 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
  2. கடாயை சூடாக்கி, பால் கொதிக்க விடவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும் தீயேக் குறைத்து, பால் பாதி அளவாக வத்தும் வரை கொதிக்கவிடவும்.
  3. 5 முதல் 8 நிமிடங்களுக்குப் பிறகு, பால் பாதியாக வத்தியதும் சுடை அணைக்கவும்.
  4. பிறகு இப்பாலை குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் குளிர வைக்கவும்.
  5. இதற்குபின் பயன்படுத்தபோகும் பீட்டர் ஹூக் மற்றும் கிண்ணத்தை 1 முதல் 2 மணிநேரம் வரை குளிரூட்டவும்.
  6. அது குளிர்ந்தப்பின், 1 கப் விப்பிங் கிரீம் சேர்த்து , அந்த குளிர்ந்த பீட்டரைப் பயன்படுத்தி பீட் பண்ணத் தொடங்குங்கள்.
  7. 2 நிமிடங்களுக்குப் பிறகு 5 டேபிள் ஸ்பூன் ஐசிங் சர்க்கரையைச் சேர்த்து, மென்மையாகும் வரை கலவையை பீட் செய்யவும்.
  8. பிறகு 1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
  9. இப்போது குளிர்ந்த வத்தவைத்த பால் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
  10. ஒரு ஸ்பேட்டூலாவைப் பயன்படுத்தி மெதுவாக கலக்கவும்.
  11. கலவையை ஏர் டைட் பாக்ஸுக்கு மாற்றி, குறைந்தது 8 மணிநேரம் அல்லது அவை முழுமையாக செட்டாகும் வரை உறைய வைக்கவும்.
  12. இப்போது ஒரு ஸ்கூப்பரை பயன்படுத்தி வெண்ணிலா ஐஸ்கிரீமை கோன் அல்லது கிண்ணங்களில் பரிமாறவும்.

பரிமாறுவதற்கு முன் சில சோகோ சிப்ஸ் அல்லது சோகோ சிரப் சேர்த்து பரிமாறவும்!

author avatar
seithichurul
ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்21 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்24 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா1 நாள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்1 நாள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!