இந்தியா

காத்திருக்கும் பேராபத்து: இமையமலையில் 8.5 அளவில் நிலநடுக்கம் வரலாம்?

Published

on

பெங்களுரூ ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்கவியல் நிபுணர் சிபி.ராஜேந்திரன் நடத்திய ஆய்வில், எந்த நேரத்திலும் இமையமலையில் கடும் நிலநடுக்கம் ஒன்று வரலாம் என எச்சரித்துள்ளார். இது 8.5 ரிக்டர் அளவில் ஏற்படும் என அவர் நிலவியல் இதழியில் வெளியிட்டுள்ளார்.

இமயமலையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் டெக்டானிக் தகடுகளில் பல இடங்களில் அழுத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது 8.5 ரிக்டர் அளவு கொண்டதாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருக்க வாய்ப்புள்ளது.

நேபாளத்தின் மோஹன கோலா மற்றும் இந்தியாவின் சோர்காலியா பகுதிகளுக்கு அடியிலுள்ள டெக்டானிக் தகடுகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த டெக்டானிக் தகடுகளின் முன் பகுதியானது இமையமலையின் மத்திய பகுதியின் அடியில் உள்ளது. இந்த தகடுகளில் அழுத்தம் அதிகரித்து வருவதால் அது எந்தநேரமும் நிலநடுக்கமாக வெடிக்கலாம். எதிர்காலத்தில் நிகழ உள்ள இந்த நிலநடுக்கத்தால் பெரும் நாசம் ஏற்படும். எனவே பேரழிவை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என அந்த ஆய்வு அறிக்கை எச்சரித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version