உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.. மருத்துவமனை, கட்டிடங்கள் இடிந்ததில் 35 பேர் பலி!

Published

on

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 35 பேர் பலியாகினர்.

இந்தோனிசியாவில் உள்ள கலவேசி தீவில் இன்று அதிகாலை திடீரென பூகம்பம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அனைவரும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். இருப்பினும் ஒரு சில கட்டிடங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தன.

சுமார் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மருத்துவமனை உள்ளிட்ட கட்டிங்களும் இடிந்து விழுந்தன. முதலில் 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்டது. பின்னர், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இடுபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மருத்துவமனை கட்டிடங்கள் இடிந்ததால், அதில் சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள், மருத்துவ பணியாளர்களும் பலத்த காயமடைந்தனர். நிலநடுக்கத்தால் அங்குள்ள கவர்னரின் அலுவலகமும் லேசாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Trending

Exit mobile version