இந்தியா

சந்திரயான் 2 எடுத்து அனுப்பிய பூமியின் புகைப்படம்!

Published

on

சமீபத்தில் விண்ணில் நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் முதன் முதலாக படம் பிடித்த பூமியின் படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலாவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ தயாரித்த சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 22-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 2 விண்கலம். இதுவரையில் நிலவின் தென்துருவ மண்டலத்தில் எந்த நாடுமே தடம் பதிக்கவில்லை. இதனால் இதில் இந்தியா உலகிற்கே முன்னோடியாக உள்ளது. எனவே இதுவரையில் இஸ்ரோ எடுத்துக்கொண்ட பணிகளிலேயே சந்திரயான் 2 தான் மிகக் கடினமானது.

ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜூலை 22 பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2 விண்கலம் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரை இறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சந்திராயன் 2 பூமியைப் படம் பிடித்துள்ளது அனுப்பியுள்ளது.

இதனை இன்று இஸ்ரோ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. பூமியின் புகைப்படங்கள் நேற்று சந்திராயன் 2 விண்கலத்தால், LI4 புகைப்பட கருவி மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version