தொழில்நுட்பம்

புதிய ஆப்பிள் iOS 12.1 இல் இ-சிம் சேவை.! நாளை முதல்.!

Published

on

ஆப்பிள் நிறுவனம், தனது இரண்டாவது ஹார்ட்வேர் துவக்க நிகழ்ச்சிக்காகத் தயாராகிவிட்டது. அக்டோபர் 30, நாளை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபாட் ப்ரோ மாடல் மற்றும் இன்னும் சில ஹார்ட்வேர் சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iOS 12.1 இயங்குதளத்தை பயனர்களுக்காக வெளியிடப் போவதாகவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய இயங்குதளத்தின் சிறப்பம்சங்களாக க்ரூப் பேஸ் டைம், டூயல் சிம் வசதி மற்றும் இ-சிம் வசதிக்கான இணக்கம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய க்ரூப் பேஸ்டைம் அம்சம் மூலம் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 32 பேருடன் வீடியோ கால்லில் பேச முடியும்.

இந்த க்ரூப் பேஸ் டைம் வசதியுடன் புதிய ஐபோன் மாடல்களுக்கான டூயல் சிம் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் “XR”, “XS” மற்றும் “XS மேக்ஸ்” உள்ளிட்ட மாடல்களுக்கு டூயல் சிம் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. புதிய டூயல் சிம் வசதி மூலம் பயனர்கள் இரண்டு செல்லுலார் சேவைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். ஆப்பிள் ஐபோன்களில் டூயல் சிம் வசதிக்கென, அந்நிறுவனம் டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது.

 

Trending

Exit mobile version