உலகம்

சிம் இல்லாத மொபைல்போன்: ஆப்பிள் ஐபோன் புதிய முயற்சி!

Published

on

மொபைல் போன் செயல்பட சிம் கட்டாயம் என்ற நிலையில் சிம் இல்லாத மொபைல் போனை உருவாக்க ஆப்பிள் ஐபோன் நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் ஐபோன் நிறுவனம் ஒவ்வொரு முறையும் புதிய சீரியஸ் ஐபோன்களை வெளியிடும்போது புதுப்புது அம்சங்களை கொண்ட மொபைல் போன்களை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சிம் கார்டு இல்லாமல் நேரடியாக இ-சிம் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய ஐபோனை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்து வெளியாக கூடிய ஐபோன் 15 சீரியஸ் மாடல்களில் நேரடியாக சிம் இல்லாமல் இ-சிம் பயன்பாட்டில் உருவாகும் புதிய தொழில்நுட்பத்தை உலகில் அறிமுகப்படுத்துவதில் ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இந்த முறையில் உருவாகும் ஆப்பிள் ஐபோன் வெற்றிகரமாக செயல்பட்டால் அதனை அடுத்து ஆண்ட்ராய்டு மொபைல் உள்பட அனைத்து வகைகளிலும் இ-சிம் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பாகத்தில் சிம் இல்லாத மொபைல்போன்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version