தமிழ்நாடு

கே.சி.வீரமணி வங்கிக்கணக்குகள் முடக்கமா? அதிர்ச்சி தகவல்

Published

on

முன்னாள் அமைச்சர் கேசி வீரமணியின் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியின் சோதனையின் முடிவில் அவரது வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று காலை கேசி வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். 34 லட்சம் ரூபாய் ரொக்கம், ரோல்ஸ்ராய்ஸ் கார் உள்பட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்கம், 175 யூனிட் மணல் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் கேசி வீரமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியதாகவும் வங்கி லாக்கரையும் சோதனை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கேசி வீரமணி மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது வங்கி கணக்குகளை முடக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கே.சி.வீரமணி அவரின் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் அமைச்சராக இருந்த பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளார். இதுதொடர்பாக, வீரமணி, அவரின் உறவினர்கள், முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளர், நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடங்களில் சோதனைச் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருவில் இரண்டு இடங்கள், சென்னையில் ஆறு இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் நடத்தப்பட்டுள்ள சோதனையில் 34,01,060 ரூபாய் பணம், ரூ.1,80,000 மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலர், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம் (அதாவது 623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்குத் தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இவ்வழக்கின் எதிரியான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் சுமார் 275 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு மட்டும் தோராயமாக 30 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது.

Trending

Exit mobile version