தமிழ்நாடு

பெரியார் பிறந்த நாளில் உறுதிமொழி எடுத்த முக ஸ்டாலின், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துர்கா ஸ்டாலின்!

Published

on

நேற்று பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஒருபக்கம் பெரியாரின் பிறந்தநாளில் சமூக நீதிக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கொடைக்கானலில் உள்ள கோவில் என்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சத்திய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் காயத்ரி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி மற்றும் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.

முதல் நாளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன என்பதும், அடுத்த நாள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இதனை அடுத்து காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதற்காக அவர் மதுரை வரை விமானத்தில் வந்து, அதன்பின் கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டரில் வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காயத்ரி தேவி சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் கலந்து கொள்வது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் வந்த பின்னர் தான் பல உயர் அதிகாரிகளுக்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது. சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த துர்கா ஸ்டாலின், அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஒருபக்கம் பெரியாரின் பிறந்த நாளில் முதல்வர் உறுதிமொழி எடுக்க இன்னொரு பக்கம் அவருடைய மனைவி துர்கா தேவி சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா தேவி மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதும் ஸ்டாலின் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் தனது மனைவியின் கடவுள் நம்பிக்கையில் அவர் தலையிடுவதில்லை என்பதும் இந்த விஷயத்தில் துர்கா ஸ்டாலின் சுதந்திரமாக செயல்பட அவர் அனுமதித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version