தமிழ்நாடு
திமுகவின் பொருளாளர் ஆகிறார் துரைமுருகன்.. போட்டியின்றி தேர்வு!
சென்னை: திமுகவில் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்வாகிறார்.
திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும். இதில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும்.
அதிகாரப்பூர்வ் அறிவுப்பு செவ்வாய் கிழமை வெளியாகும். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்.
இவருக்கு எதிராக யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் திமுகவின் பொருளாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வாகிறார். இதுகுறித்து ஆக.28 நடக்கும் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.