தமிழ்நாடு

ஸ்டாலினை பற்றி துரைமுருகன் அசிங்கமாக பேசினார்: சுதீஷ் பரபரப்பு தகவல்!

Published

on

தேமுதிக மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனையடுத்து திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசியது தொடர்பாக விளக்கம் அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தேமுதிகவின் இந்த அனுகுமுறை ஆரோக்கியமானது அல்ல என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் துரைமுருகன் திமுகவையும், திமுக தலைமையையும் அசிங்கமாக தன்னிடம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார் சுதீஷ்.

திமுக பொருளாளர் துரைமுருகனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். தனிப்பட்ட காரணங்களுக்காகவே துரைமுருகனை சந்திக்க சென்றோம். துரைமுருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை துரைமுருகன் பொய் கூறுகிறாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார் சுதீஷ்.

சுதீஷ் அதிமுகவுடன் பேச சென்றது எனக்கு தெரியாது, நாங்கள் துரைமுருகனை சந்திக்க சென்றது சுதீசுக்கு தெரியாது என தேமுதிக நிர்வாகி இளங்கோவன் தெரிவித்தார். மேலும் அரசியல் காரணங்களுக்காக துரைமுருகனை சென்று சந்திக்கவில்லை என அனகை முருகேசன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சுதீஷ், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவுடன் தான் முதலில் பேசினோம். அதிமுகவுடன் பேசுமாறு பாஜக கூறியதால் நாங்கள் சற்று தாமதமாக பேசினோம். பாமகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட சமயத்தில் தேமுதிகவுடனும் பேசியிருந்திருக்கலாம். பாமக, அதிமுக கூட்டணி உறுதியானதால் திமுக எங்களை கூட்டணிக்கு வருமாறு அழைத்தது. அதிமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

மேலும், துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சொந்த காரணத்திற்காகவே சந்தித்தனர். சில நாட்களுக்கு முன்னர் துரைமுருகனுடன் கூட்டணி குறித்து பேசியது உண்மை. கூட்டணி தொடர்பாக பேசிய விவரங்களை நாங்கள் வெளியிடமாட்டோம். துரைமுருகன் என்னிடம் என்ன என்ன பேசினார் என்று தெரியுமா? துரைமுருகன் கட்சியை பற்றியும், தலைமையை பற்றியும் பேசியதை சொன்னால் அசிங்கமாகிவிடும். நாகரிகம் கருதி துரைமுருகன் திமுக குறித்தும், திமுக தலைமை குறித்தும் பேசியதை நான் வெளியிடமாட்டேன் என்றார் சுதீஷ்.

seithichurul

Trending

Exit mobile version