தமிழ்நாடு

துரைமுருகன் முன்னிலை, எல்.முருகன் பின்னடைவு: திடீரென ஏற்பட்ட திருப்பம்!

Published

on

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக கூட்டணி வேட்பாளர்கள் பலர் முன்னிலையில் இருந்தாலும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் பின்னடைவில் இருந்து வந்ததாக வெளிவந்த செய்தி திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இன்று மதியம் வரை துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பின்னடைவில் இருந்ததாகவும் அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமு முன்னிலை வகித்து வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி காட்பாடி தொகுதியில் 18வது சுற்றில் அதிமுக வேட்பாளரை விட சுமார் ஆயிரம் வாக்குகள் திமுக வேட்பாளர் துரைமுருகன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த திடீர் திருப்பம் காரணமாக திமுக தொண்டர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

அதே போல் இன்று காலை முதல் தாராபுரம் தொகுதிகளில் பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் முன்னிலையில் இருந்தார். அவர் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவார் என்று பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி எல் முருகன் தாராபுரம் பகுதியில் பின்னணியில் 1,166 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். தற்போது திமுகவை சேர்ந்த கயல்விழி 48,998 வாக்குகளையும், எல்.முருகன் 47, 832 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதன் மூலமாக எல். முருகன் 1,166 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version