தமிழ்நாடு

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Published

on

திமுக பொருளாளராக உள்ளார் துரைமுருகன். இவர் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுகவில் தற்போது மூத்த தலைவராக உள்ளவர் துரைமுருகன். கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர் இவர். சீனியர் நிர்வாகியான துரைமுருகன் தற்போது மு.க.ஸ்டாலினுடன் அவருக்கு துணையாக வலம் வருகிறார். வயது இருந்தாலும் அரசியலில் சுறுசுறுப்புடன் இயங்குபவர். இவர் செய்யும் அரசியல் நய்யாண்டிகள் மிகவும் பிரபலம்.

தனக்கே உரிய பாணியில் எந்த கேள்வி கேட்டாலும் அசராமல் பதில் சொல்லும் ஒரு மூத்த அரசியல்வாதி துரைமுருகன். சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் திமுகவில் பொருளாளர் பதவி வகிக்கிறார். இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் துரைமுருகன். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version