தமிழ்நாடு

சில நூறு வாக்கு வித்தியாசத்தில் கிட்டிய வெற்றி; துரைமுருகன் குமுறல்!

Published

on

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ஆளுங்கட்சியான அதிமுக, 66 இடங்களில் வெற்றியடைந்துள்ளது.

திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால், மு.க.ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலைப் பொறுத்தவரை திமுக, பல இடங்களில் சில நூறு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

அதில் குறிப்பிடத்தகும்படியான வெற்றி வேட்பாளராக வந்தவர் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன். காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன், 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதற்கு அவர், ‘இதைப் போன்றதொரு விஷயம் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. ஆனால், வெற்றி என்பது வெற்றி தான். இவ்வளவு குறைவாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு சூழல் தான் காரணம்’ என்று பூசி மொழுகி பதில் அளித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version