சினிமா செய்திகள்
94வது ஆஸ்கர் விருதுகள்: 6 விருதுகளை வென்ற ஒரே படம்!
94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் டூன் என்ற திரைப்படம் இதுவரை ஆறு விருதுகளை வென்றுள்ளது.
டூன் திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை ஒளிப்பதிவாளர் கிரெய்க் ஃபேசர் விருது பெற்றார். அதேபோல் சிறந்த ஒலிக்கான விருது சிறந்த இசை மற்றும் சிறந்த புரடொக்சன் டிசைன்ஸ் ஆகிய விருதுகளையும் வென்றதூ. மேலும் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் சிறந்த எடிட்டர் ஆகிய விருதுகளையும் இதே படம் பெற்றுள்ளதால் இதுவரை டூன் திரைப்படம் ஆறு விருதுகளை வென்றுள்ளது.
மேலும் சிறந்த துணை நடிகர் விருது கோடா படத்திற்கு கிடைத்தது. நடிகர் டிராய் கோட்சர் (Troy Kotsur) துணை நடிகர் விருது பெற்றார். மேலும் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை என்கான்டோ என்ற திரைப்படம் வென்றது. இந்த படத்தை பைரன் ஹோவார்ட் மற்றும் ஜேம்ஸ் புஷ் இணைந்து இயக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுகாக ரயா அண்ட் தி லாஸ்ட் டிராகன், லூகா, ஃப்ளீ, தி மிட்செல் vs தி மெஷின்ஸ் உள்ளிட்ட படங்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் என்கான்டோ இந்த விருதை தட்டிச்சென்றது.