சினிமா செய்திகள்

துல்கருக்கு வில்லனான கெளதம் வாசுதேவ் மேனன்!

Published

on

எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த இரு படங்களின் நிலை என்னவென்றே தெரியாமல் உள்ளது. இந்நிலையில், துல்கர் சல்மானுக்கு வில்லனாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மானுக்கும் நேற்று தான் பிறந்த நாள். பிறந்த நாள் பரிசாக தனது ரசிகர்களுக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகவுள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ரீது வர்மா நடித்துள்ளார். விஜய் டிவி ஆங்கர் ரக்‌ஷன் துல்கரின் நண்பராக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் மாஸ் காட்டும் வில்லனாக கெளதம் வாசுதேவன் மிரட்டுகிறார்.

seithichurul

Trending

Exit mobile version