சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் தந்த பரிசு, சந்தோஷத்தில் மூழ்கிய படக்குழு!

Published

on

திரைப்படங்கள் மீதான தீராத காதல், அர்ப்பணிப்பு, பரிசோதனை முயற்சிகள் மீதான ஆர்வம், தரமான கதைகள் தேர்வு என தனது திரைப்பயணத்தில் அற்புதமான இடத்தை அடைந்திருக்கிறார் துல்கர் சல்மான்.

ஒரு தயாரிப்பாளராக தனது ‘Wayfarer Films’ நிறுவனம் மூலம் அனைவரது பாராட்டுக்களையும் குவித்த படங்களை தயாரித்துள்ளார். தற்போது தனது நிறுவனம் மூலம் “Production No 4” படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படத்தில் ஷைனி டாம் சாக்கோ, துருவன், அஹானா கிருஷ்ணா உட்பட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். துல்கர் சல்மானின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு மற்றும் முழு ஆதரவில், படக்குழுவின் உதவியில் இப்படத்தின் படப்பிடிப்பு 50 நாளில் முடிக்கப்பட்டது.

ஆன்ட்ரியாவின் பிசாசு 2 போஸ்டர்… வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மிஷ்கின்

அதிலும் கோவிட் பொதுமுடக்க சிக்கல்கள் நிறைந்த நிலையில் இத்தனை விரைவாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் படக்குழுவில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கியது அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிறகு நடிகர் ஷைனி டாம் சாக்கோ உடனடியாக நடிகர் துல்கர் சல்மான் மற்றும் அவரது மனைவி அமல் ஷுஃபியா அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“Production No 4” படத்தை பிரசோப் விஜயன் இயக்க, ரதீஷ் ரவி எழுத்து பணிகளை செய்துள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஃபாயிஷ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டெஃபி சேவியர் உடை வடிவமைப்பு செய்துள்ளார். சுபாஷ் காருன் கலை இயக்கம் செய்ய, ரஞ்சித் R மேக்கப் பணிகள் செய்துள்ளார்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அலுவா பகுதியின் கண்கவர் பகுதிகளில், கோவிட்- 19 வழிகாட்டு விதிமுறைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்பட்டு 50 நாளில் படமாக்கப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version