சினிமா செய்திகள்

அஜித் உடன் டூயட் பாடும் வித்யாபாலன்!

Published

on

அமிதாப்பச்சனின் பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார்.

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத், மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித்தை வைத்து இயக்கி வருகிறார்.

பிங்க் படத்தில் இருந்து நேர்கொண்ட பார்வை முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என எச். வினோத் தெரிவித்திருந்தார்.

மேலும், அந்த படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியில்லை. ஆனால், இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

மேலும், யுவன் சங்கர் ராஜா இசையில், அஜித் – வித்யா பாலனுக்கு டூயட் பாடல் ஒன்றும் இருக்கிறதாம்.

இப்படி ஆல்டர் செய்து கொண்டே போவதால், பிங்க் படத்தில் இருந்த வீரியம் நேர்கொண்ட பார்வையில் இல்லாமல் போய்விடுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டாப்ஸி நடித்திருந்த முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் வேதா நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி அல்லது அந்த மாத இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Trending

Exit mobile version