தமிழ்நாடு

பிரதமர் வருகை… இன்று சென்னை மெட்ரோ ரயில்களில் இலவசமாகப் பயணிக்கலாம்!

Published

on

பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருவதையொட்டி சென்னை மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் இலவசமாகவே பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பொருட்டு தமிழக தலைநகர் சென்னைக்கு இன்று வருகை புரிகிறார் பிரதமர் மோடி. சென்னைக்கு இன்று காலை 10.30 மணி அளவில் வந்திறங்கும் மோடி தொடர்ந்து பல நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். சென்னைப் பணிகளை முடித்துவிட்டு பிரதமர் மோடி கேரளா செல்லவும் திட்டம் வைத்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருவதால் சென்னை நகரம் முழுவதும் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் சென்னை நகருக்குள் வெளி மாவட்ட வாகனங்கள் உள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. நகருக்குள்ளும் பொது போக்குவரத்து கணிசமாகக் குறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதாகப் பாதிக்கப்படாமல் இருக்க சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று இலவசப் பயணம் செய்யலாம் என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரையில் இலவச மெட்ரோ ரயில் பயணத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

seithichurul

Trending

Exit mobile version