இந்தியா

ஒமிக்ரான் எதிரொலி: டிசம்பர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!

Published

on

ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக டிசம்பர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் நுழைந்துவிட்டது என்பதும் நேற்று தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் உறுதி செய்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 70க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருக்கும் நிலையில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் வெளிநாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் மிக அதிகமாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் அதிகமானோர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலும் ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் மும்பையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மும்பை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி வரை பொதுக்கூட்டம், பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதும் நான்கு பேருக்கு மேல் பொது இடத்தில் கூட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை நகர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version