தமிழ்நாடு

இன்று 20 மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: எந்தெந்த மாவட்டங்கள்?

Published

on

சென்னை உள்பட 20 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் நேற்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையடுத்து பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை குறித்த தகவல்கள் நேற்று இரவு முதல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இதுவரை 20 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருசில மாவட்டங்களில் இருந்து விடுமுறை அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அறிவிப்பின்படி இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்க பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், தேனி, மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சேலம், கடலூர், நெல்லை, அரியலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த ஆட்சித்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version