தமிழ்நாடு

FastTag முறைக்கு மாற கால அவகாசம் நீட்டிப்பு..!

Published

on

தேசீய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கட்டணம் செலுத்துவதற்கு FastTag முறையைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த சூழலில் புத்தாண்டு முதல் அதாவது ஜனவரி 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் செலுத்த FastTag முறையை மட்டும் தான் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், FastTag முறையில் மக்களுக்கு நிலவும் குழப்பம் மற்றும் கோளாறுகளால் FastTag முறைக்கு மாற கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால், FastTag முறைக்கு கட்டாயம் மாற வேண்டிய கால அவகாசத்தை பிப்ரவரி 15-ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய சூழலிலும் FastTag முறை அமலில் இருந்தாலும் 70 சதவிகித வாகனங்களே இயந்திர முறையிலான FastTag கட்டண வழிமுறையைப் பின்பற்றி வருகின்றனர். ஆனால், பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பின்னர் FastTag இல்லை என்றால் இரு மடங்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு தீர்மானமாக அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version