உலகம்

விமான பணிப்பெண்களின் மார்பை பிடித்த பயணி, சீட்டோடு கட்டிப்போட்ட சக பயணிகள்: வைரல் வீடியோ

Published

on

விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் குடிபோதையில் விமான பணிப் பெண்களின் மார்பை பிடித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதோடு இதனை தட்டிக் கேட்க வந்த சக பயணி ஒருவரையும் முகத்தில் குத்தி காயம் ஏற்படுத்தினார். இதனை அடுத்து அந்த போதை ஆசாமியை பயணிகள் அனைவரும் சேர்ந்து சீட்டோடு சேர்த்து கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலடெல்பியா என்ற பகுதியிலிருந்து நேற்று விமானம் ஒன்று கிளம்பியது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் கழிவறைக்கு சென்று விட்டு சட்டை அணியாமல் வெளியே வந்துள்ளார்.

இதனை அடுத்து பணிப்பெண் அவரிடம் சட்டையை அணிந்து கொள்ளுமாறு கூறி அவருக்கு சட்டை அணிய உதவியும் செய்தார். ஆனால் உதவி செய்த பணிப்பெண்ணின் மார்பை பிடித்து அவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். இதனை தட்டிக்கேட்ட இன்னொரு பணிப்பெண்ணின் மார்பையும் அவர் பிடித்துள்ளார். இதனை அடுத்து அங்கிருந்த சக பயணி ஒருவர் அந்த நபரை கண்டித்தார். ஆனால் அவருடைய முகத்திலும் அந்த பயணி ஒரு குத்து விட்டார்.

இதனை அடுத்து சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த குடிகார பயணியை சீட்டில் உட்கார வைத்து டேப் வைத்து கட்டினர். அதன் பின்னர் விமானம் தரையிறங்கியதும் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்த வீடியோவை சக பயணி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version